அம்மா
அம்மா என்று அழைக்கும் போதே
ஆனந்தம்...!
அம்மாவின் ஸ்பரிசும் அதைவிட
ஆனந்தம்..!
அம்மாவின் காலடி
சொர்க்கம்..!
அம்மாவின் மடியல் தலைசாய்ப்பது
அதைவிட சொர்க்கம்..!
அம்மா அம்மா என்பதில்
அகிலமே அடங்கியிருக்கிறது !
அம்மா அம்மா உங்களால்தானே
இம்மண்ணில் பிறந்தேனம்மா ..!
இதைவிட பேரானந்தம் எது அம்மா
உங்கள் அருகில் எப்போதும் இருப்பதுதான் அம்மா..!
அம்மா உங்கள் கண்களால் !
வெளிச்சத்தைக் கண்டேன் !!!
உங்கள் கைகளால்
இன்பத்தைக் கண்டேன்!!
உங்களால் வாழ்கையை
வாழக் கண்டேன் தாயே..!!
உங்கள் மூச்சுக் காற்று
என் உயிருள்ள வரை என் சுவாசம் ..!
அம்மா உங்கள் முந்தானை
எனக்கு கைக்குட்டை!!
அம்மா உங்கள் அயரா உழைப்பு
என் உயர்வுக்காய் ..!
அம்மா உங்கள் வியர்வைத்துளிகள்
என் வாழ்க்கையின் வெற்றியாய்...............
அம்மா என்ற சொல் அனைவருக்கும் ஓர் அறிய பொக்கிஷம் ..!