வருவது ராசாவா ராசாத்தியா

காத்து கிடந்த தனியிடத்தில்
காற்று மட்டும் வீசுது!
காஞ்சி போன கருவறையில்
பிள்ளையொன்று உருவாகுது ....!!

தந்தை பேசிப் பேசி தீர்க்கிறார்
அது வெளி வரும் முன்னே...!
பிள்ளை வைக்கும் மீதி குருதி...!
அதனிலே வாழ்கிறாள் அதனுயிர் கருதி...!!

பிடித்து நடக்க குச்சி இல்லை
இருந்தும் பரவாயில்லை- பிள்ளைக்கு
தாத்தா தயார்செய்த பட்டனத்து துணி...,
கதை நயம் பேசி ஊர்சுற்றிய பாட்டி
தாளம் போட்டு
ஆட்டுக்கும் கவி சொன்ன காட்சியென்ன?

ஊர் பேசும் பேச்செல்லாம்
ஊமையன் கத்தும் இரைச்சலடி...!
உன் பொழப்ப நீ பாரு
என் பொழ்ப்ப நான் பார்ப்பேன்

பட்டினி கிடந்தாலும்
உயிர்காப்பாள் என் பத்தினி
சோறு போட பணமில்லை
இருந்தும் கணவனும் கரையவில்லை...

முதல் மகள் கேட்கும் கேள்விக்கெல்லாம்
தலையாட்டி பதிலளிக்கும் தாய்மைக்கோ
எவர் எது சொன்னாலும்
மனதில் குழப்பம் எழுவது
வருவது ராசாவா ராசாத்தியா மட்டுமே...,

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (12-Jun-14, 11:28 am)
பார்வை : 176

மேலே