அம்மாவும் பொய்யும்

அம்மாவும் பொய்யும்

பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

உச்சி வெயிலது உச்சிக்கு நேராய்
உருக்கி மூளையை கருக்கி மூஞ்சியை
புத்தியை மயக்கி சக்தியைக் குறைப்பதால்
மத்தியா னம்தான் அடிக்கும் பேய் என
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.


அதிகப் புளிப்பு ஆகா தென்பதால்
அதுஉன் நரம்புகளை முறுக்கும் என்பதால்
வலிப்பு நோய்களே புளிப்பு என்பதால்
புளிய மரங்கள் பேய்களின் வீடென
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

சுவாசிக்கப் பிராண வாயு தந்திடும்
சுகமே பகலில் மரத்தின் நிழல்களும்
இரவில் அது விடும் கரியமில வாயு
ஏற்கா தென்பதால் அமுக்கும் பேய் என
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

இரவுப் பொழுததில் இரைக்கு அலைந்திடும்
கொடிய ஜந்துகள் விடிய நெருங்கிடும்
பெருகிய நீர்நிலை உறங்கிடும் வேளை
குளித்திடக் கோபம் கொன்றிடும் எனவும்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

இதுபோல் பொய்கள் இன்னும் எத்தனை
இயற்றிச் சொல்லுவாள் எமது அன்னை
அதுபோல் தொடரட்டும் அவள்மறை மெய்கள்.
அனைத்தும் வாழ்க அவள்முறை நெறிகள்.
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (12-Jun-14, 12:09 pm)
Tanglish : ammavum poiyum
பார்வை : 217

மேலே