இரவு காலம்

பகலவன் வெஞ்சினம் தணிந்து அமைந்தனன்
மதி உதித்ததென்று கடலலைகள் ஆர்பரித்தன
இதுகாறும் அஞ்சி ஒளிந்த விண்மீன்கள் முகம் காட்டும்
நிலமடந்தை உறங்கிடவே தென்றல் மெல்ல வீசியதே.

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (12-Jun-14, 6:36 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
Tanglish : iravu kaalam
பார்வை : 104

மேலே