மலர்களும் மனிதர்களைப் போலவோ

மலர்களே நீங்களும்
மனிதர்களைப் போலத்தானோ?
கட்டுக்கடங்கா
காதல் உணர்ச்சி
கரைபுரணடு ்
காவியம் படைக்கின்றீரே!
காதலனை கண்டு
மலர்கிறது "தாமரை"
வெட்கி சிவந்தது
"ரோஜா"
காதலனை கண்டு
சிரித்தது"சூரியகாந்தி"
அந்தியின் மையலில்
"அந்தி மந்தாரை"
இரவின் பரிதவிப்பில்
"அல்லி"
இதழ் விரிந்து தாபத்தில்
"செம்பருத்தி"
உணர்ச்சியின்
உடைப்பில் "பருத்தி"
மணம் வீசி
மயக்கும்"மல்லிகை"
மலரினும் மெல்லிய காதல்
மலர்களுக்குமா....?

எழுதியவர் : சித்ரா ராஜ் (12-Jun-14, 7:38 pm)
பார்வை : 118

மேலே