இதுவரை

இதுவரை
============

காணாக் கண்களுக்குள் இருகரும்பிறை
காண்கிறேன்
அபகரி, காணாமல் போகின்ற
தேடல் வழக்கொன்றில்
யாருமே காணாத புரளியாகிவிடுகிறேன்

கட்டுண்ட அவள் பெண்மைக்கு
ஏனோ கோபம்
கனவிற்கிடையில்
துணைதேடிடும் விரல்களுக்குள்
விரல்கள் அடிப்பணிய, ஒரு மறக்கா ஊகம்

என்னை நுகர்ந்துபார்த்து நீ எழுவதற்கே
ஒரு சதுர்யுகம் போய்விடும் ,,
ஒரே ஒரு வாய்ப்பளி ,,,,
ஆயிரம்முறை ஆளுமைசெய்து ,,
லட்சம்முறை உனக்குள் வாழ்ந்துவிடுகிறேனே

வெள்ளியோடை நிழற்திரைக்கிழிக்க
காத்துக் கிடப்பது
கனத்துக் கொண்டிருக்கிறது
நாளை முழுப்பிறை
நீ வந்துபோகும் நிகழ்வுகளை
முரண் செய்துவிடாதே
என் வானம் இருண்டுவிடும் பார்க்கிறாயா

சந்திக்கும் நாட்களின் தூரங்களை நிரப்ப
என்னிடம் உன் தடயங்களில்லை
பாதுகை துறந்திட்ட
பாதங்களுக்கு இருக்கைகளாக
நேற்று நீ
விட்டுச்சென்றசுவடுகளில்
ஏதேனும் துணையிருக்கிறதா என்றால்
அவைகளும் இல்லை

துயரங்களின் எல்லைகள் நாலாப்புறமும்
நீண்டுகொண்டே இருக்க
இருண்மை(வெருவு) ஆட்கொண்டது
தெரிகிறதா ,,??
உன் உக்கிர பிரவேசத்தினால்
இன்றேனும் அதை அவிரச்செய்துவிடு
மில்லிமீட்டரளவு
உன் கொலையிதழ்விரிசலுக்குள்
என் ஆயுள் மூழ்கிடச்செய்துவிடுகிறேன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (13-Jun-14, 4:36 am)
பார்வை : 94

மேலே