தமிழே தலைத்தோங்கு

நான் எழுத்தாளன் அல்ல
எம்மை எழுதிட தூண்டியவர் தோழர்களே !
காலூன்ற வழியின்றி கழித்த காலமுண்டு
தோள்தந்து தூக்கிய கரங்களுண்டு!

தமிழ் அறிவேன் ...
அதன் நயமறியேன்
எழுத்தில் சங்கமித்து
ஏதோ சில அறிந்தேன்
நட்பின் நன்மையறிவேன் நன்று!

எங்கோ இருந்து எம்மை
இயக்கும் இறையறியேன் அன்று!
இணையத்தில் இணைந்தபின்
எனை இயக்கும் தோழனே
இறையென்றுணர்ந்தேன் இன்று!

படைத்தவன் பிரம்மனென்றால்
படிப்பவன் இறைவனன்றோ !!
மனதில் தோன்றிய ஐயங்களை
களைபவன் தானே கடவுள்!
ஐயங்கள் ஆயிரமுண்டு
ஆயினும் ஆறுதல் தானே
முதல் தோழன் !!

ஆறுதலால் ஆற்றுகிறேன் எம்பணியை
எழுத்தறிவித்தவன் இறைவனெனும்
கூற்றுப்படி ...அவனே எம் தோழன்!
அகரம் தொட்ட எனை சிகரம் தொட
தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்...!!

எனதேக்கம் தீர தமிழ் வளர்ந்திட
தோள் கொடுக்கும் தோழர்களே!!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் !
தமிழ் தழைத்தால் தீரும் எம் தாகம் !!

எழுதியவர் : கனகரத்தினம் (13-Jun-14, 10:55 am)
பார்வை : 118

மேலே