கவிஞன்
கவிஞன் கவி எழுத
கவிதையை நாம் படிக்க
கற்பனையும் நிஜமும்
கவிதையில் கலந்து வர
கணக்கில்லாக் கவிஞர்
கையெழுத்தில் மூழ்கிட
விந்தை என்று நாம் ரசிக்க
விதைகளென கவிதைகளைப்
பாரெங்கும் பறை சாற்ற
கவிதைஎல்லாம் செழித்திட
கவிஞன் தொட்டஇடம் பட்ட இடம்
கவிதைகளால் நிரம்பிட
போற்றிடுவோம் கவிஞனை
வாழ்த்திடுவோம் கவிஞனை
கவி வாழ்க கவிஞன் வாழ்க
என்று மக்கள் போற்றிடவே
தன்னாலே நகர்ந்திடுமே
கவிஞன் புகழ்
எட்டுத் திக்கும் பரந்து
எட்டாத இடமெல்லாம்
தொட்டிடுவான் கவிஞன்
கவிதை எனும் மழையாலே .
.