பொங்கட்டும் எங்கும் தமிழிசை

அசையொடு இசைந்தாடு தமிழே
தமிழே நான்முதலாய் பருகிய அமுதே!
அமுதே முக்கனியின் சுவையே
சுவைக்க திகட்டாத முத்தமிழே!!

முத்தமிழ் வளர்ந்த செந்தமிழ்
செந்தமிழ் தந்த . சிந்தையினால்
சிந்தை இசைக்கும் மூவிசையே!
மூவிசையின்றி பாவிசையேது!!

பாவிசையேற்றி தமிழ் பாடிடுவோம்
பாடிப்பாடி மனம் கூத்தாடிடுவோம்
கூத்தன் வாழ்ந்த மாமதுரை
மாமதுரை போற்றும் தாய் தமிழே!!

தமிழே உனக்கு சங்கமுண்டு
சங்கத்தில் தமிழர் யாவரும் அங்கமுண்டு
அங்கங்கள் ஆடிட சங்கமிப்போம்
சங்கத்தமிழினை பொங்க வைப்போம்!!

எழுதியவர் : கனகரத்தினம் (11-Jun-14, 11:51 pm)
பார்வை : 136

மேலே