வாழ்க்கையெனும் பயணம்

வாழ்க்கை
ஓர் அழகான பயணம்
இந்த பயணத்தில்,
பல நிற மனிதர்களை
நாம் சந்திப்போம்...
ஆனால்,
ஒரு சிலர் மட்டுமே
நம் மனதோடு நிரந்தரமாக வசிக்கின்றனர்!
திடீரென சில நேரத்தில்,
நம் வாழ்க்கை பயணத்தில்
நாம் வேறு பாதையில்(வினோத பாதையில்)
செல்ல நேரலாம்!
அது, நம் வாழ்க்கையை
மாற்றச் செய்யும்!
சிலருக்கு மிகச்சரியானதாக!
சிலருக்கு வருத்தமானதாக!