உன் படைப்பு பெண்ணா மண்ணா

காதலை முதலில் சொல்ல
கன்னியர்க்கு உரிமை இல்லை
சொல்லும் கன்னியர்க்கோ
கட்டுக்கடங்காப்பெண் என்று
சமூகத்தில் நற்பெயரும் இல்லை
.......
காமத்தை வெளிப்படுத்த
மனைவியற்கு மதிப்பு இல்லை
துணிந்த மனைவியற்கோ
"அலைவதாய் "பெயரை வைத்து
அற்பமான பேச்சு உண்டு
.........

கூடலை மறுப்பதற்கு
மனைவிக்கு வாய்ப்பே இல்லை
மறுக்கும் மனைவியற்கோ
என்னை பிடிக்காதென்றால்
எவனை பிடிக்கும் என்று
தீப் பிழம்பு வார்த்தை உண்டு
.........
குழந்தை பெறுவதற்கோ
குழந்தை பேரை தள்ளி வைப்பதற்கோ
பெண்ணுக்கு உரிமை இல்லை
மீறும் பெண்ணிற்கோ
மனைவி என்ற பட்டம் இல்லை
.........
சேமிப்பை முதலீடு செய்ய
பெண்ணுக்கு வாய்ப்பில்லை
முதலீட்டின் முதலாலியாய்
கணவனுக்கே தகுதி உண்டு
மீறும் பெண்களுக்கோ
சம்பாதிக்கும் திமிர் என்ற
சான்றிதழில்லா பட்டம் உண்டு
..............
இறைவா உன் படைப்பு
பெண்ணா? மண்ணா?
உரிமைக்காய் போரிட்டால்
குடும்பம் கோர்ட்டாகும்
விவாகரத்து பதிவாகும்
பிள்ளைஉகள் நிலை என்னாகும்
என்றெண்ணி அடங்கி வாழும்
அருமை சகோதரிகளே
குடும்பத்தின் அச்சாணி
குலம் காக்கும் மகாராணி

எழுதியவர் : சித்ரா ராஜ் (13-Jun-14, 10:49 pm)
பார்வை : 147

மேலே