நெஞ்சில் நிற்கும் ராகம்

பள்ளிக்கூடம் போகும்போது
பாதையோரம் நான் கேட்ப்பேன்
பாவை அவளின் ராகம் ..
பாவை அவளின் ராகம் கேட்டு என்
பாதங்கள் தடைபடும்
பயணிக்க ...

தேவராகமாய் என்
தேகம் தொட்டு என்னுள்
மோகம் தந்த
மங்கையின் முகம் பார்க்க
மணிக்கணக்கில் காத்திருப்பேன்
மர நிழலில் ....

நினைவு தெரிந்த நாள் முதல்
நனைக்கவில்லை என் மேனியை எந்த ராகமும் ..
இணைத்துவிட்டதே என்
இதய ஓட்டத்தை ...

பள்ளிக்கூட
பாடங்களும்
பாவி இவனுக்கு நினைவில்லை ..
பாவை அவளின்
புது ராகம் எனக்கு
புத்துயிர் கொடுக்கிறதே .....

காதோரம் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரியை
காண ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன் ..
கள்ளிக்காட்டு பாதைகளில் ....
காளையிவன் மனமறிந்து
கண்ணெதிரே தோன்றி
கரிசனம் கொடுப்பாளா?

எழுதியவர் : தஞ்சை கவிஞர் செல்வா (15-Jun-14, 8:59 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 72

மேலே