கண்ணாளன் வருவானா

கண்மாயில் மீன்பிடித்து
காரமாய்க் குழம்புவைத்து
கத்திரிக்காய் கூட்டுவைத்து
கார்கால இரவினிலே
கண்ணாளன் வருவானென்று சமைத்து
கண்விழித்து
காத்திருக்கேன் ,,,

பொழுது சாய வருவேனென்று
புன்னகையோடு சென்ற மாமன்
பொழுதும் சாய்ந்து போனது
போன்வானும் சிவந்தது ..
போனவன் வருவானா என்று
போன வழி பார்த்திருக்கேன்...

எழுதியவர் : தஞ்சை கவிஞர் செல்வா (15-Jun-14, 9:05 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 94

மேலே