மறந்துவிட்டாயா

மறந்துவிட்டாயா !
முக்கு ரோட்டில்
முதல் பார்வையிலே
என்னுள் ...நீ
கவிதையாய் பிரசவித்த
கண நிமிசத்தினை ...

மறந்துவிட்டாயா !
மொழிகள் மறந்து
தினம் தினம்
நம் கண்கள் கவிபாடும்
காலை பொழுதினை ...

மறந்துவிட்டாயா !
உன்னிடம்
ஓர் வார்த்தையாவது
பேச நினைத்து
உனைப்பார்த்ததும்
ஊமையாகும்
நிமிடங்களை ...

மறந்துவிட்டாயா !
என் பலம் முழுவதும் திரட்டி
நான் பேசிய
முதல் பவித்திர
வார்த்தையை ...

மறந்துவிட்டாயா !
பதில் தேடி
உன்பின்னே
வந்து சென்ற
பசுமை நாட்களை ...

மறந்துவிட்டாயா !
சுற்றித்திரிந்த
என்னுள் ...நீ
சுகமாக புகுத்திய
சுந்தர சொற்களை ...

மறந்துவிட்டாயா !
பேச்சிற்காக தவித்து
பேசிய பின்
மவுனமே பரவயில்லையென
மனதிற்குள் புலம்பியதை ...

மறந்துவிட்டாயா !
என் மனதின்
ஓசையைகூட
உன் மவுனத்தால்
வினவிய
விழியசைவுகளை...

மறந்துவிட்டாயா !
என் பெயர்கூட
உன் வாயினால்
உச்சரிக்கப்படும்போது
அழகாகிவிடும்
அற்புதத்தை ...

மறந்துவிட்டாயா !
சுகமளித்த சூரியனையும்
சுட்டெரித்த நிலவையும்
குளிரான பகலையும்
சூடான இரவையும்

மறந்துவிட்டாயா !
மன்மதனின்
வில்வீச்சிலும்
' நாம் ' சொல்வீச்சில்கூட
மயங்காத
மகத்தான பொழுதுகளை

மறந்துவிட்டாயா !
என் கண்ணில்
உன் முகம்பார்க்க முயன்று
'முடியாதுபோக '
உன் உருவத்தில் உள்ளதே
நான் தானேஎன்று
உணர்த்திய பொழுதினை

மறந்துவிட்டாயா !
என்னை மறந்துவிடு
என நீ பொய்யுரைக்க
எனை நிஜமாக சுட்ட
குறும்பு நிமிசத்தினை

மறந்துவிட்டாயா !
நீ
மறந்தால்
நான்
மரித்துவிடுவேன்
எனத்தெரிந்தும்
எனை மறந்தேவிட்ட
" அந்த மரண யுகத்தினை "
******************************************************************
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (15-Jun-14, 5:49 am)
பார்வை : 189

மேலே