யாரடி நீ மோகினி - நாகூர் கவி

அடி பெண்ணே...!
உன் கெழுத்திக் கண்ணால்
என்னை கொளுத்திவிட்டுப் போகாதே...!

நாலடித் துப்பட்டாவால்
வானத்தைச் சுருட்டிய
புவியில் வந்த
நிலவோ நீ...?

நீ என்னை கடக்கும்
அந்த ஒரு நொடிக்குள்
எத்தனை பூகம்பம் நிகழும்
என் நாடிக்குள்....!

உன்னை படைத்த பிறகு
பிரம்மன் பதவி விலகிவிட்டனாமே...?
மானிடனாய் பிறப்பதற்கு....!

பிரம்மனையே...
கடலைப் போட வைத்த
காதலோ நீ...?

உன் மகிமையை
கேட்டுத்தான் என்னவோ....?
கடலில் அலை
அலையாய் ஆர்ப்பரிக்கிறது....?

கடற்கரைப் பக்கம்
நீ சென்றுவிடாதே...!
மீண்டும் ஓர்
சுனாமியைக் கிளப்ப...!

உன்னை பார்த்தவர்கள்
எல்லோரையுமே
இதய நோயாளிகளாய்
மாற்றி விடுகிறாயாமே...?

நீ சிரிக்கும்போது
எத்தனை இதயங்கள்
தூக்கிலிடப்படுகின்றன
தெரியுமா அது உனக்கு...?

பதினாறு வருட
பெற்றோர் வளர்ப்பில் அடங்காதவன்
உன் ஒரு நிமிட உபதேசத்தில்
கம்பனாகி விடுகிறானாமே...?

ஊமையைக் கூட
சூப்பர் சிங்கராய் மாற்றிடும்
உன் மௌனமொழி
சிங்காரி...!

உன்னிடம்
ஒரு வேண்டுகோள்...!
சேலைக்கட்டி
சாலையோரம் சென்றுவிடாதே...!

உன்னால்
பல விபத்துகள் நிகழும்...!

எழுதியவர் : நாகூர் கவி (15-Jun-14, 12:45 am)
பார்வை : 763

மேலே