என் கனவு

உந்தித் தள்ளும் உணர்வு
முந்திச் செல்லும் கனவு
அந்திப் பொழுதின் தனிமை
பந்தி விரிக்கும் இயற்கை
சப்தம், நிசப்தம்
இச்சை,அனிச்சை கோபம், தாபம்
சிரிப்பு ,அழுகை
கண்ட காட்சி
காணவே இயலாத காட்சி
அனைத்திலும் என் கவிதைகளின்
அணுக்கள் கலந்தே இருக்கிறது!
இருந்தும் இல்லாக் கடவுளைப்போல
அது சில நேரங்களில் ஏற்றியும்
பல நேரங்களில் ஏமாற்றியும்
கொண்டே இருக்கிறது.....!