சிட்டுக்குருவியின் சீரிய சிணுங்கள்
பசுமைக் காடுகள்
வருடும் தென்றல்
பொய்க்காது பெய்யும் மழை
வனத்தின் நடுவில் எம்வசிப்பிடமே !
தென்றல் வருடலில்
ஊஞ்சல் ஆடிடுவோம்
தென்னங்கீற்றினிலே நாரெடுத்து
கிளைகள் ஓரத்திலே வீடமைப்போம்
பூக்கும் பூக்களில் தேன்குடித்து
கனிகளை சுவைத்து மகிழ்ந்திருப்போம் !
மனிதர்கள் உலாவா காடு
மகிழ்ச்சியின் சொர்க்கமே !
மனிதர்கள் நிரம்ப நிரம்ப
மகிழ்ச்சியும் நரகமே !
குடிலை இழந்துவிட்டோம்
நகர மனிதன் குடிலுக்குள் தஞ்சமானோம்
நரகமனிதன் செயலாலே
நம்பிக்கை இழந்துவிட்டோம் !
வளர்ச்சி வளர்ச்சியென
மனிதனின் அவசரத்தால்
வாழ்வே வீழ்ச்சியாச்சு!
மரக்கட்டை வண்டி வேகம் கூட்ட
இயந்திர வண்டியில் ஏறியதால்
மாசுக்கூடி மழையும் பொய்த்தது!!
உணவு உற்பத்தி பெருக்கயென்னி
ஆழ்துளை கிணறில் நீர் இறைக்க
இயந்திர மோட்டார் செயலாக்க
ஆற்று படுகைகள் மடிந்தது!
காடுகள் அழிந்து வீடுகளாய்
மனிதர்கள் வாழ்விடமாக
எங்கள் வாழ்க்கை பொய்த்தது
மனிதனை அண்டி அகதிகளாய்
ஒண்டி பிழைத்திருந்தோம்
அதுவும் பொருக்கா மனிதனால்
காமபசிக்கு மருந்தாய் உயிர் துறந்தோம்!
கைபேசியில் பேசிப்பேசி
காதல் வளர்க்கும் மானிடரே!
மனமகிழ்வோடு நீ கொஞ்சி மகிழ
குஞ்சி சிறகை முறிப்பது முறையா ?
கா(த)தில் உனக்கு சூடேற
கதிர்வீச்சு அறியாமல் சிரிகின்றாய் !
கதை முடிக்கையில் உனக்காய்
உயிர்முடிப்பது நானல்லவா !!