நான்

நான்
நான் யார் ...?
சமுத்திரம் நுழைந்த மழைத்துளியாய்
என்னை தேடுகிறேன்
சிப்பிக்குள் புதையும் துளியா நான்
அன்றி
கரையில் நுரையாய் மாறும் துளியா நான்
விந்தின் முளையில் விளைந்த
இறைச்சி பிண்டமா நான்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையில் தவழும்
சாதாரண மிருகமா நான்
நான்
ஏன் பிறந்தேன் ...?

இயற்கையா ஈன்றது என்னை
அப்படி எனின்
ஒரு கவலை இல்லை
இயற்கை போன்று நானும்
அழிவேன் ஒரு நாள்
எவரும் என்னை கேட்பார் இல்லை

இறைவனின் படைப்பா நான்
கேள்வி கணக்கு இருக்கிறதே எனக்கு
நான் எப்படி வாழ வேண்டும்
யார் சொல்லித்தருவார்

மண்ணில் பிறந்த அனைத்தும் மிருகமே
ஆனால்
விசேட படைப்பு மனிதன்
அவனுக்கு
ஒரு பாதை உண்டு
ஒரு குறிக்கோள் உண்டு
ஒரு இலக்கு உண்டு

அவனில் உள்ளவனா நான்
நான் என்னை தேடுகிறேன்
நான் நானாக இருந்தபடி ....

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (15-Jun-14, 9:17 pm)
Tanglish : naan
பார்வை : 94

மேலே