மீண்டும் நான்
இரக்கமற்ற இரவில்
வெறுமையில் நிறைகிறது மனம்
புயல் உரசிய கரையில்
புதைந்து கிடக்கிறது களம் !
யாருமற்ற தனிமையில்
வலிமையை திரட்டுகிறேன்
போர்க்கள நெறிகளை மறந்துவிட்ட
புயலை எதிர்த்து !
உடைந்த வானத்துத் துகள்களில்
கரைகிறது துணிவு
சிதைந்த என்னை தட்டி எழுப்பவென
யாசிக்கிறேன் ஒரு பூங்காற்றை !
ஒரு ஸ்பரிசத்தின் தைரியத்தில்
என் சினம் கொண்ட வீரத்தால்
மீண்டும் சேகரிக்கிறேன்
விதியால் உருகுலைந்த என்னை !!!