போ வா
அப்புறம் ........
நேற்றிரவு
உங்களைக் கண்டபடி
திட்டி விட்டேன்
சில பல
கெட்டவார்த்தைகளும்
அதிலிருந்தன
உமது
உற்றார் உறவினர்கூட
இழுபட்டார்கள்
அப்படியே
அந்த
முறுக்கைக் கொஞ்சம்
கடித்துக் கொண்டு
மதுவைக் கொஞ்சம்
மிடறிக்கொண்டு
சொல்லுங்கள் பார்ப்போம்
நீங்களென்னை
என்னவெல்லாம்
திட்டியிருக்கிறீர்கள்