அப்பாவுக்காக -

உறங்கும் நேரங்கள் எல்லாம்
உதிரத்தில்.. வரும் நாளை
பற்றியே சிந்தனை ஓட்டம் ..
இவருக்குள் ..

தாராளமாக அன்பை அள்ளி தரமாட்டார் ..
தாமாக முன் வந்து பேச மாட்டார் ..
பணம் கேட்டால் போதும் ..
ஆயிரம் கணக்குகள் கேட்டு வைப்பார் ...
தாமதமாய் வீடு வந்தால் ..
கேள்விகள் பல வைத்திருப்பார்
இதுதான் இன்றைய தலைமுறையின்
குற்றசாட்டு இவர்மேல் ..

தாய் போல் பாசம் வைக்க தெரிந்தும் ..
தயங்குகிறார் ..தந்தை
ஏனோ ....
அவர் கண்ணீர் துளிகளை எல்லாம்
இதயத்தில் சேர்த்துவைப்பதாலோ
என்னவோ கண்கலங்கி
பார்பதில்லை ..நாம்

நம்மை பற்றியே எண்ணும் ..
நமக்காக வாழும் ஒரு உயிர்
அப்பா ..

இன்றும் நியாபகம் இருக்கிறது ..
அவர் வாங்கி தந்த நடை வண்டியும் ..
அவருடன் பயணித்த நாட்களும் ..

#குமார்ஸ் ..

எழுதியவர் : குமார்ஸ் (15-Jun-14, 7:01 pm)
பார்வை : 1517

மேலே