தோல் கொடுத்தான் தோழன்
கண் திறந்த நேரத்தில்
காணவில்லை அந்நகரம்.......
கனவுகள் தாங்கிய சிறகுகள்
கண்ணீருடன் அழிந்தது........
கை கொடுக்க யாரும்மில்லை என்று
கை தடவிய வண்ணம்........
அன்று தனிமையே எனது நிலைமை........
கண் மூடும் நேரத்தில் கனவுகள் சில
கனவுகளை நினைவாக்க சிறகுகள் பல.....
அந்த சிறகை போல
வந்தவன் தான்
என் தோழன் ........
சிறகை போல மட்டும் வந்தவன் அல்ல
வாழ்கை என்னும் பயணத்தையும் கற்று கொடுத்தான்.......
அவன் சொன்னவை, செஞ்சவை, கற்று கொடுத்தவை...........
கோபத்தில் பொறுமையாக இருக்க சொன்னான்....
பயணத்தில் விவேகத்தை கற்று கொடுத்தான்......
சிரிப்பில் ஆரோக்கியத்தை தந்தான்.....
தோல்வியின் போது வெற்றியை அடையவைத்தான்.........
நட்பில் நல்லதை கற்று கொடுத்தான்.....
கற்பனையில் கவிதை எழுதவைத்தான்.......
வேதனையில் உறுதியை தேடிதந்தான்.......
வாழ்கையில் நல் உபதேசங்களை கற்று கொடுத்தான்.........
தோல் கொடுத்தவன் மட்டும் அல்ல நம்பிக்கையும் கற்று கொடுத்தான் அவன் தான் என் தோழன்.......