விழித்தெழு தமிழா விடுதலை வேண்டும்
புதைத்து விட்டோம் தமிழனை என்றப்
பூரிப்பில் இருக்கின்றான்
சிங்களவனும் காங்கிரஸ்காரனும் !
வேட்டையாடி விட்டோம் விடுதலைப் புலிகளை
என்ற இருமாப்பில் இருக்கின்றான்
சிங்களவனும் காங்கிரஸ்காரனும் !
கற்பழித்து களித்து விட்டோம் தமிழ்ப் பெண்களை
என்றே ஏளனம் செய்கிறான் எம்மின எதிரிகள்
சிங்களவனும் இந்திய அமைதிப்படையும் !
இவற்றையெல்லம் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றான்
இங்குள்ளத் தமிழனும் தலைவனும் !
அங்கே எம் இனம் அழிய
இங்கே தன் குடும்பத்திற்கு உழைத்தவன்
தலைவனாம் அவன் பெயர் கலைஞ்சனாம் !
அவன் பின் இனியும் செல்பவன் தமிழனாம் ?
போர்க்களத்தில் கொள்ளத் தான் வேண்டும்
அப்பாவித் தமிழர்களை !
வேட்டையாடத் தான் வேண்டும் விடுதலைப் புலிகளை
என்றுரைத்தவள் தமிழினத் தலைவியாம் !
அவள் பெயர் அம்மாவாம் ?
அவள் பின் இனியும் செல்பவன் தமிழனாம் ?
சிதைந்து போன உறவுகளின் உடலைப் பார்
சிதைந்தும் சிதையாமலும் இருந்தும் இறந்தவனாய்
வாழும் மிச்சத் தமிழனைப் பார் !
காணும் இடமெல்லாம் பிணக்குவியல்
கட்டப் படாத கல்லறைகள் !
கேட்க்கும் தூரத்தில் இருந்தும் கேட்க
முடியாத குரலில் மரண ஓலங்கள் !
இவற்றையெல்லாம் கண்டு கட்டுக்கடங்காத
உணர்வுகளோடு பகைவன் மீது பாயாமல்
பதுங்கி இருப்பது ஏனோ !
தமிழா பயம் தானோ ? நீ பாயத் தெரியாத
கோழைப் புலித்தானோ ?
மறத் தமிழனே !
மறந்தாயோ தமிழனின் வீரத்தை ?
இழந்தாயோ தன் மானத்தை ?
சாதிப் பார்த்து நீ
சாதித்தது என்ன ?
மதம் பார்த்து நீ
மாற்றியது என்ன ?
அழியும் நிலையில் நம் இனம்
அறியாதவன் போல் வாழ்வாத
உன் குணம் ?
போர்க்களத்தில் புறமுதுகிடுவதும்
போர்க்களம் புகாமல் இருப்பதும்
தமிழனுக்கு தகுமோ ?
உலகை வென்ற இனத்திற்கு உன்
செயல் உயர்வைத் தருமோ ?
தமிழ் இனம் ஒன்றை மட்டும்
பார்த்து இணைவோம் !
தனித் தமிழ் ஈழத்தை ஈன்றேடுப்போம் !
தமிழன் எனில் பகிரவும் !
தமிழ் ஈழம் வேண்டும் என்பதை உணரவும் !
தயங்காமல் போராடுவோம் !
தனி ஈழத்தை வென்றெடுப்போம் !