எல்லாம் மறந்து மறித்து போகும்
மூச்சுக்கு மூன்று தடவை
கனவுகள் சுமந்து,300-நாள் சுமை கடந்து
வாழவந்தாய் என் செல்வ மகனே !!!
இப்படி ஆசையை சீராட்டிய
தாலாட்டுகளின் தாளங்கள் கூட தெரியாமலே
வளர்ந்து வரும் வருங்காலமே!
தாலாட்டுக்கு தாழ்பாள் இட்டு
ஒப்பாரிக்கு முற்றுப்புள்ளி வைத்து
கிராமிய கலைகளை கிடங்கில் போற்று
கண் கானா தூரத்தில் இருக்கும்
செவ்வாய்க்கு ஆராய்ச்சு செய்யும்
அறிவுடைய ஜீவராசியா நீங்கள்?
நாளைப்பற்றி நமக்கு கவலைகள் இல்லை
புவி வெப்பமடைந்தாள் நமக்கென்ன?
நிலதிடி நீர் வற்றினால் நமக்கென்ன?
ஓசோன் ஒட்டையானால் நமக்கென்ன?
நமக்கு IPL -ம்,ஆட்டம் தானே முக்கியம்...
அன்புள்ள அப்பா அம்மாவுக்கு
என்று என்றோ எழுதியதாய் கடிதம் போல
உறவுகளும் உணர்வுகளும்
சிறைபட்டால் நமக்கென்ன??
டெக்னாலஜி என்ற பெயரில்
whats app - ல் வாழ்த்தும்
Facebook -ல் புகைப்படமும்
skype -ல் குடும்பம் நடத்த கத்துகொண்ட நமக்கு
மொழியையாவது விட்டு செல்வோம்- நம்
வருங்கால சந்ததிக்கு...
இப்படியே உறவுகளையும் நட்புகளையும்
கணினி திரையில் புதைத்து கொண்டே போனால்
வருங்காலத்தில் எல்லாம் மறந்து மறித்து போகும் உணர்வுகளையும் சேர்த்து....
பரமகுரு க