கவிஞனை புரட்டுவாயாக

===========================================
புத்தகம் படிக்கும் என்னவளுக்கு என்னைப்பற்றி அப்புத்தகம் அறிவுரை கூறினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் எனது எழுத்துக்கள்...
===========================================


உருவமில்லா உணர்ச்சிகள் அறிவாயா?
அவன் எழுத்தினை எடுத்துப் பாரடி...
உணர்வுகள் அனைத்தும் உனதென
புரிதலில் நீயும் உணர்வாயே!!

அளவான பேச்சினில்
அவனையும் அளந்தாய்
அவனும் ஆறடி
ஆனாலும் அறிவாளி...
அதனையும் புரிவாயே!
ஆறுதல் உரைப்பாயா?

கவியென புகழ்ந்தாய்
ஆயினும் மறுத்தாய்
என் மணம் வேதியியல்
காலம் சிதைத்திடும்
சிறுபூச்சும் தின்றிடும்...

அவன் மனம் அறிந்திடு
அனைத்தையும் புரிந்திடு
உனக்கென பிறந்தவன்
உலகமே மறந்தவன்...

உருவமே இழந்தவன்
உன்னால்,
உடலினை இளைத்தவன்
என்னை மறந்திடு
அவனையும் மனந்திடு...

புரட்டியது போதும்
பிடிவாதம் வேண்டாம்
எழுத்தினில் கிடப்பான்
எழுந்துச்செல் -அவனை
இனிதே புரட்டச்செல்
புரட்டிய சேதியை
என்னிடமே வந்துச்சொல்...

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (17-Jun-14, 8:41 pm)
பார்வை : 84

மேலே