காதலா காதலா- நாகூர் லத்தீப்

மனதிலே மலர்ந்திடும்
இதமான உணர்வுகள் !

விழிகளில் ஊடேறி
தத்தளிக்கும் தவிப்புகள் !

வன்முறைகள் இம்சைகள்
ஊடலாக பாடலாக என்றுமே !

மொழிகள் இல்லா
வார்த்தை ஜாலங்கள் !

கண்களில் தெரிந்திடும்
கண்ணீரால் கூறிடும் !

இதயத்தை எதிர்க்கும்
இடைவிடா வன்முறை !

ஒருகணம் உதிக்கும்
மின்னல் மறுகணமே காதல் !

சொல்லாத எழுத்து பேசாத
வார்த்தை தோன்றாத இடம் !

வாழ்கையின் தத்துவம்
உணர்த்திடும் அற்புதம் !

பிறந்திடும் தானாக
வளர்ந்திடும் குழந்தையாக !

விலாமல் வீழ்த்தும்
இதய வலிகளை உணத்தும் !

வராது வந்தால்
விடாது விடாது கருப்பு !

இளமையின் ராகம்
மனதுள்ளே மோகம் !

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (17-Jun-14, 8:25 pm)
பார்வை : 90

மேலே