இசை மட்டும் என் உயிர் முட்டும்

இருக்கும் இடத்தில்
இதயம் தொலைந்து போகிறது ...
இந்த இசையில் மட்டுமே ..
உடல் ஒடிந்து நிற்கும்போது
உருவம் கொள்கிறது
போலி மருந்துகள் ..
பல வண்ண நிறங்களால்
மனம் சலித்து போகும் போது
இசை தேய்த்து போகும்
வருடல்கள் ..மட்டுமே
பல எண்ணங்களால்..
சந்தோச நேரங்களை
சங்கீதம் சொல்லும் ..
ரணமான கணங்களை ..
இசை மட்டுமே வெல்லும் ...
பொங்கும் சந்தோசத்தை அள்ளி வைக்கிறது ..
எனை மிஞ்சும் துன்பத்தை தள்ளி வைக்கிறது ..
இந்த இசை ..
இசை என்னை போன்றே ..
உங்களையும் பாதித்திருக்கும் ..
(இன்னிசை மட்டும் இல்லை என்றால் ..
என்றோ நான் இறந்திருப்பேன் ..)
-வைரமுத்து
இசை வாழும் ..வாழ வைக்கும் ..
#குமார்ஸ் ....