விழுந்தவன் எழுந்திடுவான்

வன்னுளம் கொண்ட அவன்!
அவனுளம் வரண்டு இங்கே!
இரக்கமனம் இழந்து இவன்!
இவனுளம் வன்மம் கொண்டு!
கொன்று உயிர் ஒழிக்கின்றான்!

இன வெறி கொண்டு இங்கே!
சேர்ந்திருந்தார் உறவுகளை!
உறவைப் பகை ஆக்கியவன்!
ஆளும் வர்க்கம் நாமென்று!
நமை அழிக்க எழுகின்றான்!

அடக்கிட நினைத்த அவன்!
பரமசிவன் கழுத்துப் பாம்பாய்!
எழுந்து நின்று குரல் எழுப்பி!
சந்திச் சண்டியனாய் !
சண்டித்தனம் காட்டுகின்றான்!!

போதி மர போதனைகள்!
போதிக்கும் வாயினாலே!
சாதி மதம் பேசுகின்றான்!
இன வெறியைத் தூண்டுகின்றான்!
போதி மரப் போலியவன்!

எதைக்காண நினைக்கின்றான்!
நினைத்ததை நடத்துகின்றான்!
ஆட்டுவித்த பாம்பாக - இவனும்
பம்பரமாய் ஆடுகின்றான்!
பாவம் இவன் பெட்டிப்பாம்பானான்!!

இரத்தமது கொதித்தாலும்!
கொதித்த அது ஆறிப் போகும்!
ஆறிப் போனதனால் கோழையில்லை!
கோழையவன் எழுந்திடுவான்!
எழுந்தவன் மடிந்திடுவான் கோழையாகி!!

காலம் வரும் காத்திருப்பான்!
கனியும்வரை பொருத்திருப்பான்!
பொருத்தனால் விழவில்லை!
விழுந்தவன் எழுந்திடுவான்!
எழுந்தவன் விழுந்திடுவான்!

எமை அழித்து செழித்து!
வாழ்ந்திடலாம் என நினைத்து!
வாரி மண்ணை தலையில் போட்டு!
தன்னினத்தை தான் அழிக்கும்!
காலம் வெகு தொலைவிலில்லை!!

பொருத்தார் அரசாள்வார்!
பொங்கினார் காடேறுவார்!
பொருத்திருந்தால் இதையுணர்வாய்!
பொங்கிட இது தருணமில்லை!
பொறுமையதே உன் பேராயுதம்!

எழுதியவர் : ஜவ்ஹர் (17-Jun-14, 10:05 pm)
பார்வை : 115

மேலே