தகுதி
உள்ளங்கையில் வைத்து
தாங்க வேண்டாம்
நித்தம் அன்பால்
உருகச் செய்ய அவசியமில்லை
மழையில் நனையும்
துணிகளை கூட
எடுத்து வைக்க மறுக்கட்டும்
ஆனால்
உதிரம் கசியும்
அந்த நாட்களின்
வலியை மட்டும்
உணர்பவராய் இருக்கட்டும்
என் வருங்கால கணவன் !