பெயருக்கு முன்னால்

என்னங்க உங்க பெயர் பலகையிலெ Br. K .Babu, M. D (Emaatraan Bank) ன்னு போட்டிருக்கீங்க. உங்க பேருக்கு முன்னாடி இருக்கும் Br. அதுக்கு என்னங்க அர்த்தம்.

பொறியாளர்கள் எல்லாம் அவங்க பேருக்கு முன்னாடி Er. ன்னு போட்டுக்கறாங்க. மருத்துவர்களும் முனைவர் பட்டம் வாங்கினவங்களும் அவங்க பெருக்கு மூன்னாடி Dr. ன்னு போட்டுக்கறாங்க. நாங்க அவங்களவிட எந்த வகையிலும் கொறஞ்சவங்க இல்ல. வங்கி அதிகாரிங்கெல்லாம் இனிமேல் எங்க பேருக்கு முன்னாடி Br. ன்னு போட்டுக்குவம்.

அப்ப ஆசிரியர்கள் எல்லாம் அவுங்க பேருக்கு முன்னாடி Tr. (Teacher) ன்னு போட்டுக்கலாம் இல்லையா?

ஓ, தாராளமாப் போட்டுக்கங்க. இனிமேல் நீங்க உங்க பெயர் பலகையிலெ Tr. S. Murugesan, M.A., M.Ed., ன்னு போட்டுக்கங்க. அது தான் சரி.

நன்றிங்க Banker பாபு (Br. Babu) அவர்களே

எழுதியவர் : மலர் (19-Jun-14, 8:47 am)
Tanglish : peyarukku maunnaal
பார்வை : 375

சிறந்த நகைச்சுவைகள்

மேலே