அறிவித்தது பராசக்தி --நேரிசை ஆசிரியப்பா

அன்னை பண்னை பொன்னை அணியாக்கி
முன்னை விணை பிணியாக்கின் அணியாக்கிட
என்னை இணையடி ஆளாக்கி பணிதூக்கி
முன்னை விணை தூளாக்கி பனியாக்கி
என்னை கவிபுனை கவியாக்கி
சேயென துணை யானென அறிவித்தாளே .
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
மாயை பேயென நாயினனை ஜெயித்தும்
சேயென தாயவள் ஜெயித்திடும் பேயினின்
பொய்யுரை தயையால் மாய்த்து நாயகியின்
மெய்யுரை உயர்பொருள் உய்வித்துள பேயை
மாய்த்து ஜயஅருள் பெய்தே
சேயெனஜயநிலைதாயிவள்அறிவித்தாளே
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
அறிவித்து புரிவித்தது அறியா அறிவதை
பொறிபத்து செறிவித்து மரியா குறியதை
அறிவித்து தரிவித்து புரியா புரிவதை
சரீரத்து தரிவித்து பெரியதை
சிறியோனுக்குதரிவித்துசேயெனஅறிவித்தாளே
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
தாகமோ மோகமோ தனலென கனலென
அகமோ அதனால் வனமென சினமென
புகவே இருந்தால் மனமெனும் குடுவையை
ஜகமாதா பூங்கழல் தரிசனமெனும் குளிர்வெள்ள
வகைநீரால்நிரப்பிடுவாள் பொறியொரு
இருவகை மலர்ந்துபூங்கழல் பற்றிடுமே
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
குறிப்பு : 1.அன்னை பராசக்தியின் கவிகோயிலுக்கு
புதுவழி காட்டி தரிசனத்துக்கு வழி வகுத்த நண்பன் விவேக்பாரதி க்கு நன்றிகள்
2.இது நான் எழுதிய முதல் மரபு கவி.என் கவித்துவம் வெளிப்படுத்த எழுதியதல்ல
அன்னையை வணங்கிட எழுதியது
தவறுகள் இருப்பின் கண்டித்து சுட்டிட
வேண்டுகிறேன்..
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)

எழுதியவர் : குருவருள்கவி (20-Jun-14, 6:58 am)
பார்வை : 174

மேலே