செல்ல மழையே

சின்னஞ்சிறு மழையே ,

இடி மின்னல்
துணையின்றி
இவ்வையகம்
வந்ததன் நோக்கம்
என்னவோ

பாவை இவளின்
பாதம் நனைக்கும்முன்
கன்னம் தொட
ஆசை உனக்கு

ஓசையின்றி உள்
நுழைந்து நெஞ்சத்தை
களவாடுவதில் உனக்கு
நிகர் நீ மட்டுமே

இதழ் தீண்டிய
காற்றில் அவிழ்ந்த
பூ மொட்டுகளை
மழை முத்தமிட்டாய்

அனுமதியின்றி
ஓடுகிறாய்
கூரையின் மேல்

பட்டுப் போன
மரங்களை உன்
சிறு துளிப்
பார்வையினால்
துளிர் விடச்
செய்ய வந்தாயோ

பெருங்கிணற்றின்
வயிர் நிரப்ப
வந்த சிறு
மழையா நீ

காய்கின்ற புவி
செழிக்கத்தான்
குளிர் தென்றல்
கரம் பிடித்தாய்
என்கிறேன் நான்

உன் நேற்றைய
வரவால் இன்று
பிறந்த இளந்தளிர்களை
ஆசிர்வதிக்கத்தான்
உன் வருகையோ

நிலத்திலிருந்து
உருமாறி வான் சென்று
மேகத்தின் கருவில்
உதித்தாலும் நீ
பூமியின் பிள்ளையே

வான் செல்லும்
முன் நீர் அஞ்சல்
அனுப்பு ,வழித்
துணைக்கு என்
மூச்சுக்காற்று வரும்
காற்றோடு கலந்து !!

எழுதியவர் : கார்த்திகா AK (20-Jun-14, 1:23 pm)
Tanglish : sella mazhaiyae
பார்வை : 433

மேலே