மலரின் விதி

பூவுக்கு விதி விளையாட்டு
மணக்கோலம் பூண்டது மலர்

அப்பப்போ தெரியாமல்
முத்தமிடும்....... - மழைத்துளி

சமயத்தில் மேனியை
வருடும் ....... -காற்று

ஓயாமல் கிச்சு கிச்சு
மூட்டும்...... -வண்டு
,
இம்மூவரில் மணம் முடிப்பது
எந்த காதலனை - என்று
ஓயாமல் உலறல் கொண்டது மலர்

ஒருவனை கொண்டால்
இருவருக்கு துரோகம் !

துறவறம் பூண்டால்
பெயரேனுக்கு மலடி ! -ஆக

திருமணமும் வேண்டாம் !
துறவறமும் வேண்டாம் !
மணக்கோலம் கொண்ட நான்
காயாமல் கனியாமல் மடிகிறேன் மண்ணில் !
அடுத்த நொடி பொழுதில் உரைத்த -மலர்

எழுதியவர் : கண்மணி சேகரன் (20-Jun-14, 12:52 pm)
பார்வை : 91

மேலே