உருவமில்லா கரும்பு இறந்தாலும் இனிக்கிறது நமக்காக

வெட்டு பட்ட கரும்பு
மண்ணை முட்டி வளர்ந்து நிற்கிறது
அழகாய் வளர்ந்து நிற்கும்
கரும்பிற்கு அறுவடை நாள் இது ..

பச்சை கரும்பு சோகையும் ....
அடுக்கிவைத்த தண்டும்
அரிவாள் பட்டு பிரிகிறது
அடிக்கரும்பை விட்டு ..

ஒருபுறம் அடிக்கரும்பும் வேரும்..
களத்தில் தீக்குளிக்க ..
கரும்பு சோலைகளும்
பசுவிற்கும்...யானைக்கும்
விருந்தாக .....
மீதமான கரும்பு தண்டு
இயந்திர ஆலையில்
கண்ணீருடன் இறந்து போகிறது ..

மனிதனால்
உயிர் மரித்து ..உருவம் தொலைத்து
போனாலும்..
இறுதியில்
இனிப்பை தான் கொடுக்கிறது ..
நமக்கு ..(மனிதனுக்கு)
சர்க்கரையாக ....

கண்ணீர் சிந்திய கரும்பிற்காக
‪#‎குமார்ஸ்‬ ....

எழுதியவர் : குமார்ஸ் (20-Jun-14, 9:46 am)
பார்வை : 137

மேலே