அவள் நினைவுகளுடன் நான்

வெகுதூர பயணத்திலும்
என்னோடு அவளிருந்தாள் !
கனவாக அல்ல,
என் நினைவாக !

கண்ணோடு கலந்துவிட்ட
பெண்ணோடு பயணிக்கிறேன் !
அவளோடு இல்லாத நான்
என்னோடு இருக்கும்
அவளை (நினைவுகளை)
சுமந்துகொண்டு !!!

என்னைக் கடந்து சென்ற
எதுவும் பாதிக்கவில்லை
என்னைக்
கண்டும் காணமல்
சென்ற
அவள் கண்களைத் தவிர

காற்றோடு கதை பேசும்
கலைஞன் ஆனேன் !
என்னோடு பேச
அவளுக்கு நேரம் இல்லாததால் !!!

தர மறுக்கிறாள்
சிறு இடம்கூட எனக்கு !
அதனால்தான் எடுத்து வந்துவிட்டேன்
அவள்
நினைவுகளை என்னோடு !!!

திருடன் என்று
அவள் சொன்னாலும்
திருப்பித் தரமாட்டேன்
தரணியே எதிர்த்தாலும் !

தவறென்று அவள் சொன்னால்
தூக்கிலிடுங்கள் என்னை !

சேர்த்துவிடுங்கள்
எனக்காக அவள் வடிக்கும்
துளி கண்ணீரை மட்டும்
என் கண்ணோடு !

நான் மண்ணோடு புதையும்போது
என் கண்ணோடு கரைந்திருக்கும்
அந்தப் பெண்ணோட நினைவுகளை அது அழிக்கட்டும் !!!

-இப்படிக்கு முகில் -

எழுதியவர் : முகில் (21-Jun-14, 7:07 am)
பார்வை : 105

மேலே