தோழன் அல்ல தாய்

மடி சாய்ந்து
அழுதிடத்
தோன்றுதென்
விழிகளுக்கு!
இலக்கணப்
பிழையொன்று
கவிதைகளைக்
கேட்கிறது!
வேடந்தாங்கல்
பறவையொன்று
இளைப்பாற
இடம் கேட்கிறது!
தோள் சாயும்
தோழனாயல்ல
முடி கோதும்
தாயாய்!
...........சஹானா தாஸ்!