சிறகொடிந்த பறவைகள்
பிறவியில் பெண்ணாகி
பிறருக்கு இலக்காகி
அடைகின்ற துன்பங்கள்
ஐயோ கொடுமையம்மா .......
விலங்கிற்கும் பறவைக்கும்
இருக்கின்ற சுதந்திரத்தில்
பெண்களான எங்களுக்கு
எங்கிருக்கு சொல்லம்மா ..........
அடிமையான வம்சமாக
அனைவருக்கும் இன்பமாக
வேசியாக மட்டுமே
பாற்குதிந்த உலகமம்மா .......
எத்திசையில் போய் ஒளிந்தும்
இச்சைகளுக்கு இலக்காகி
எங்கள் தேகம் காயப்பட்டு
குருதிதானே கொட்டுதம்மா ......
தாய்க்குலமே என்றிடுவான்
தாரமாக என்னிடுவான்
பேதையான எங்களைத்தான்
போதையாக என்னிடுவான் ........
இரக்கமற்ற அரக்கர்களால்
இழிவுகளின் இலக்காகி
இறந்துபோகும் நிலைதானே
இன்றுவரை தொடருதம்மா .......
மூன்று முடிச்சி போட்டு
முந்தானை வாசம்பார்த்து
மாறிப்போகும் மணமகனின்
மாற்றம்தான் என்னம்மா .......
வரதட்சணை ஒன்றாலே
வாழ்க்கையை தொலைத்துவிட்டு
நடுத்தெருவில் நிற்கின்ற
பெண்கள்தான் பலதம்மா .........
இருக்கின்றவரையிலே
இறுக பிடிங்கிக்கொண்டு
இறுதியிலே எங்கள் வாழ்க்கை
தூக்கிலே முடியுதம்மா .......
எங்கள் மனம் சொல்வதுபோல்
இயங்கத்தான் முடியவில்லை
சதிகார உலகத்தில்
சாவைதவிர வழியில்லை ..........
கூட்டுசதி நடக்குதிங்கே
குற்றங்கள்தான் தொடருதிங்கே
பெண்கள்மீது தொடருகின்ற
வன்முறைகளுக்கு முடிவுமில்லை .......
சுதந்திர கிளியாக
சுற்றுவதற்கு வழியுமில்லை
சிறகொடிந்த கிளியாக
இறப்பதற்கு விருப்பமில்லை ........