முக நூல்
அன்றைய காலத்தில் communication Tool இல்லாத நேரத்தில் பிரிந்த (விட்டுப்போன) நண்பர்களை கண்டுபிடிக்க உதவியதில் பெரும்பங்கு face book ற்கு ஆனால் இன்றைய நிலைமை அண்ணன், தம்பிகளுக்கு கூட Add Friend கொடுத்து உறவை புதுபித்துக் கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கணவன், மனைவி கூட கருத்துகளை Comment போட்டும் Likes கொடுத்தும் பரிமாற கொள்ள வேண்டிய நிலை சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை மறைந்து விட்டதன் அர்த்தம்.
மதுரை Collector மக்களின் குறையை தீர்க்க Face Book பயன்படுத்திய நல்ல உதாரணங்களும் உண்டு. ஆனால் இன்று மொழி ஆளுமையை திணிக்க உதவும் கருவியாக சமூக வலை தளங்கள் பயன்படுகின்றன.
இனிமேல் பெண் பார்க்கும் படலம் நடக்கும் பொழுது Face Book Id இல்லாவிட்டால் நிராகரிக்கப்பட்டால் கூட ஆச்சரியம் அடைய வேண்டாம். இன்றைய குழந்தைகளுக்கு இந்த தொழில் நுட்பத்தை கற்றுத்தர வேண்டிய கட்டாயத்தில் விடப்பட்டுள்ளோம். கல்வி Tab வழி ஆகிவருகின்ற காலத்தில் நாமும் இந்த ஓட்டத்தில் பங்கு பெறாவிட்டால் அடுத்த தலைமுறைகளிடமிருந்து விலகி விடுவோம். ஆனால் இதில் கருத்து சுதந்திரம், அனைவரின் தனித்தன்மை வெளிப்படுதல், புதிய நட்பு ஆகிய நல்ல விசயங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் Face Book Post ற்காக நேரத்தை செலவிடுபவர்களும் இல்லாமல் இல்லை. மேலும் வக்ரம், பழிவாங்கும் உணர்ச்சி, ஏமாற்ற படுதல் போன்ற தீமைகளும் இருக்கின்றன.