குளியலறை பாடகன்
![](https://eluthu.com/images/loading.gif)
எழுந்தது என்னுள் இசை ஆர்வம்..
சிறியதாய் நான்கு சுவற்றுக்குள்
குழாய் வழியாய் கொட்டும் நீரின்
சலசலப்புக்கு நடுவே..!
சற்றுமுன்பு கேட்ட பாடலோ..
அல்லது அதிகமாய் நெஞ்சை வருடிய பாடலோ..
உதடுகள் முனுமுனுத்தபடியே!
அங்கிருந்த சுவருகளின் எதிரொலி
என்னை இன்னுமாய் இழுத்தது...
நான் பாடும் பாடலை
நிஜத்தில் நானே பாடியது போன்ற..
என்னத்தை எனக்குள் ஏற்படுத்தும்!
பின்னணி இசையான நீரின் சலசலப்பு..
என்னமோ ஏதோ
நானும் ஒரு பாடகன்தான்...!
அனைவர்க்கும் இனிய உலக இசைதின வாழ்த்துகள் !