தாய்
என் உடைகள் அவளாள்
உடைந்து போனது..
அம்மணமான என்
அங்கம் அழகாய் இருந்தது
அதில்
முத்தம் பல வைத்தாள்
முகவரி ஒன்று தந்தாள் ..
மூச்சடக்கி என்னை பெற்றதால்
முத்தே பவளமே
என்றேதான் கொஞ்சினாள்..
அப்பாவின் மனைவி
அப்பாவுக்கு
அப்பாவி துணைவி ...
அம்மா என்ற அன்பின்
வார்த்தைக்கு சொந்தமானவள்
இனி
எங்கு தேடினால் கிடைத்திடுவாள் இந்த உதயம் ?
ஒவ்வொரு வீட்டிலும்
உதித்து மறைந்திடும் தெய்வம்..