PEN

தென்றலில் ஏறி
முகிலை உடைத்தேன் மழைவந்தது..
மழையை பிடித்து புல்வெளி
விழுந்தேன் குளிர்தந்தது..

ஏழு வண்ண நிறமானது
என் தாவணி
நான் பூமியில்
பூத்த மகராணி..

என் கண்கள் இரண்டும் வண்டு
தினம்
தேனை தேடி சென்று உண்டு
தேவதைகளை தேடி தேடி கீதம் இசைப்பேன் .. மூங்கிலில் முத்தம் வைத்து முத்து கேட்பேன்.


ஆடை இல்லாமல் அருவி விழுகின்றது
அதனால் அழகு
ஆடை இல்லாமல் குழந்தை பிறக்கின்றது
அதனால் அழகு
ஆடை இல்லாமல் குளிக்கும் குழந்தை நானும் அழகு ...


எல்லாம் எனக்கு
அழகா இருக்கு எந்த திசையும் வாசல் திறந்திருக்கு
ஆசை இல்லாமல் வாழ்க்கை எதற்கு ?
அழகிய பூமி நாம் வாழ்வதற்கு ..

தென்றலில் ஏறி முகிலை உடைத்து
தெருவெங்கும் மழையால் நனைந்து

வா விளையாடு
தா தாளம்போடு
நீ பறவை போ பறந்து பறந்து
துன்பம் எல்லாம் மறந்து .மறந்து ..

எழுதியவர் : S .PREMGUNA (21-Jun-14, 4:27 pm)
பார்வை : 65

மேலே