s.premkumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : s.premkumar |
இடம் | : velliyanai |
பிறந்த தேதி | : 07-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 10 |
நான் பி.ஏ,தமிழ் அரசு கலை கல்லூரி கரூரில் பயின்றேன். எம் .ஏ பாரதிதாசன் பல்கலை கழகத்தில் பயின்றேன் ..கவிதை எழுதுவது
பள்ளிப் பருவம் முதலாக பழக்கம் உண்டு. ..தனிமை விரும்பி..என்பதினால் ஏன் காட்சி பொருள்கள் கவிதையாக பிறந்தன.தற்போது மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக ஆய்வு
மேற்கொள்கிறேன்.
..
என் உடைகள் அவளாள்
உடைந்து போனது..
அம்மணமான என்
அங்கம் அழகாய் இருந்தது
அதில்
முத்தம் பல வைத்தாள்
முகவரி ஒன்று தந்தாள் ..
மூச்சடக்கி என்னை பெற்றதால்
முத்தே பவளமே
என்றேதான் கொஞ்சினாள்..
அப்பாவின் மனைவி
அப்பாவுக்கு
அப்பாவி துணைவி ...
அம்மா என்ற அன்பின்
வார்த்தைக்கு சொந்தமானவள்
இனி
எங்கு தேடினால் கிடைத்திடுவாள் இந்த உதயம் ?
ஒவ்வொரு வீட்டிலும்
உதித்து மறைந்திடும் தெய்வம்..
தென்றலில் ஏறி
முகிலை உடைத்தேன் மழைவந்தது..
மழையை பிடித்து புல்வெளி
விழுந்தேன் குளிர்தந்தது..
ஏழு வண்ண நிறமானது
என் தாவணி
நான் பூமியில்
பூத்த மகராணி..
என் கண்கள் இரண்டும் வண்டு
தினம்
தேனை தேடி சென்று உண்டு
தேவதைகளை தேடி தேடி கீதம் இசைப்பேன் .. மூங்கிலில் முத்தம் வைத்து முத்து கேட்பேன்.
ஆடை இல்லாமல் அருவி விழுகின்றது
அதனால் அழகு
ஆடை இல்லாமல் குழந்தை பிறக்கின்றது
அதனால் அழகு
ஆடை இல்லாமல் குளிக்கும் குழந்தை நானும் அழகு ...
எல்லாம் எனக்கு
அழகா இருக்கு எந்த திசையும் வாசல் திறந்திருக்கு
ஆசை இல்லாமல் வாழ்க்கை எதற்கு ?
அழகிய பூமி நாம் வாழ்வதற்கு
துன்பம்
நகம்போல்
வளர்ந்து வருகிறது..
அன்பு என்னும் ஆயுதங்கள்
அதனை வெட்டி,வெட்டி,
அழகாக்குகிறது.
வெட்டப்பட்ட நகங்கள்
இறந்துபட்ட அரக்கனைபோல்
வீழ்ந்து விடுகிறது ...
அன்பே|""அன்பே: "
நம்மை ஆட்சிசெய்கிறது.
நீ
வரும்போது
நான் ஒளிந்து கொள்கிறேன்.
ஒளி தருவாய்
என ஒதுங்கி நிற்கிறேன்
வருவதும் போவதும்
உன் வேலை.
எப்போதும் நினைப்பது
என் வேலை..
கிழக்கே நீ
மேற்கே நான்..
அப்பன் மூட்ட தூக்குது
ஆத்தா சித்தாளாகீது
அண்ணன் டேபிள் கிளினரகான்
நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்
நாளைக்கு பரீச்ச
இப்ப ரொம்ப பசிக்குது
சத்துணவு ஆயா - போ போ ன்னு திட்டுது .
நீ மலை முகடுகளில்
எங்கோ ஒரு மூலையில்
என் உள்ள நோய் உடல் நோய் போக்கும்
மருந்து
செடியாய்
முளைத்திருக்கிறாய்..இரு
நோய் நீங்க
உன்னை கண்டுகொள்கிறேன்
நட்பை சூடிய
கோப்பெருஞ்சோழனாய்..
அன்னம் வேண்டி
வேலை தேடுகிறான்
அவன் வாழ்வோ....
அன்னம் போல்
மறைந்திடுமோ
வேலை கிடைப்பதற்குள் .....?
ஆயிரம் முறை தோல்வி உன்னை கட்டி அணைத்தாலும்
நீ சிந்தும் பல்லாயிரம் துளி கண்ணீரில் கரையாத அது
உனது அஞ்சாத புன்னகையில் பயந்து
வெற்றிக்கு வழி விடும்......
வெற்றி குடி கொள்ள வேண்டிய அழகிய முகத்தை
கவலை ரேகைக்கு வாடகைக்கு விடாதே....
நம்பிக்கை வை....
உன்னுடைய நம்பிக்கை மேல்.......
illatha vaanam nokki parakkum paravai
sollatha kaathalai sumakkum paavai ...
elakku illamal neelum
uir pokum varai...
by -pemguna
சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "அருந்ததி" என்ற திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த திரைப்படத்தில் இசுலாமியர் ஒருவர் பேயோட்டுபவராக வருகிறார்.
இசுலாத்தைப் பற்றி நான் ஆழமாக படித்ததில்லை. எனது சந்தேகம் என்னவென்றால், இசுலாத்தில் உண்மையிலேயே பேயைப் பற்றிய நம்பிக்கை உண்டா?., புனித குர்ஆனிலோ அல்லது வேறு எதாவது குறிப்புகளிலோ அதைப்பற்றிய சுராக்கள் உண்டா?, இன்றும் இசுலாமியர் எவரேனும் பேயோட்டுபவர்களாக இருக்கிறார்களா? இதைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலாய் உள்ளேன். நன்றி.