ஏஞ்சல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஏஞ்சல் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-Mar-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 190 |
புள்ளி | : 66 |
தேடலில் நடை போடும் சின்ன பாறை... உளியாய் தமிழ் இருக்க... சிலையாய் நான் மாற... காத்திருக்கிறேன்...
நாலரை ஆண்டுகளாய்
ஏழரை காட்டிய கடிகாரம்
ஆடத் துவங்குவதும்
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே...
கோமா நிலைக்கு சென்ற சொல்
உயிர் பிழைத்து கொள்(ல்)வதும்
என்றோ தொலைந்து போன
முகங்கள் எல்லாம்
தேடிவந்து நடித்து தொலைவதும்
ஆடல் பாடல் மட்டுமே காட்டிவிட்டு
"இவர் நல்லவரா கெட்டவரா?"
விவாதிக்கும் தொ(ல்)லைகாட்சி நிகழ்சிகளும்
எனக்கென யாரும் இல்லையே
கருப்பு பணம் கூட இல்லையே
ஆதங்கத்தை அள்ளிவீசும் புதிய கட்சிகளும்
கானல் நீராய் வாக்குறுதியை
படம்போட்டு காட்டி
பல் இழிக்கும் எதிர்க்கட்சி அணிகளும்
மதுக்கடை மாமூலில்
மஜாவாய் வாழ்ந்து
ஐந்து ஆண்டுகளின் வாக்குறுதியை
கடைசி ஆறு
கலைந்த மேகங்களில் எல்லாம்
கலையாமல் உன்னை பார்க்கிறேன்
இதயத்தின் இசையில்
சின்னதாய் மாறுதல்
லப்டப் மறந்து
உன் பெயரானது ஓசை
காரணம்
காதலா? ஹார்மோனா?
சின்னப் போட்டி நடக்கிறது
என்னில்...
பரிசளிப்பில்
காதலுக்கு
முதல் பரிசும்
ஹார்மோனுக்கு
ஆறுதல் பரிசும்
அள்ளிக் கொடுத்து
அடக்கமாய் சிரிக்கிறேன்
எனக்குள்...!
உலக மக்களையே
சுமந்து கொண்டு சுழலும்
பூமி சுழற்சி
எனை ஏதும் செய்யவில்லை...
ஆனால் உன் விழி....!
அதை சொல்ல வார்த்தை ஏதுமில்லை...
உன் கருவிழி ஒரு நொடி சுழலையில்
என் இருவிழி இமை சிலிர்க்கிறது....
இரவு பகலை
ஒரே நேரத்தில்
காண முடியாதென
நினைத்தேன் .....
உன் மலர்விழி காணும் முன்பு வரை...!
புருவம் தூக்கி
எனைக் காணும்
உன் கண்கள்
வில்லில் எறிய
தயாரான அம்புகள்....
அம்புகள் துளைத்தது
என் கண்களை மட்டுமல்ல...
உன் கண்கள் பதிந்த
என் இதயத்தையும் தான்....!
தண்டவாளம் கிடக்கும்
வண்டு காணா
பூக்களாகினேன்...
உன்னை பிரிந்த
நொடி முதல்....!
தண்டவாளம் கிடக்கும்
வண்டு காணா
பூக்களாகினேன்...
உன்னை பிரிந்த
நொடி முதல்....!
என்ன காட்டும் கண்ணாடி...?
இருக்கும் வண்ணத்தையா..?
மறைக்கும் எண்ணத்தையா..?
என்னைத்தான் நான் பார்க்கிறேன்
என்னுள் இருக்கும் உன்னைத்தான்
அது காட்டிடுது.
கனாவில் உனைக் காண
மறுத்து தான்
கண்ணுறங்க நான்
மறந்தேன்
என்னையே நீ நினைப்பதலோ.....
என் கண்ணாடி முன்னாடி வந்து
என்னடி என்னவளே....! என்று
என் முகத்தில்
உன் முகம் காட்டுகிறாய்.
காதலின் முதல் தூது
உன் முகம் காட்டும்
என் வீட்டுக் கண்ணாடி.
இறைவா ...,
நரக நெருப்பில் இருந்து
காக்க வேண்டாம்.....
நகர நீரில் இருந்து
காத்தால் போதும்...!.
உன் கால்தடம்
படவே காத்திருந்தேன்
ஆனால் நீ....
காலணி அணிந்து வந்துவிட்டாயே...!
(உதிர்ந்த மலரின்
துக்கமான ஏக்கம்)
இறைவா ...,
நரக நெருப்பில் இருந்து
காக்க வேண்டாம்.....
நகர நீரில் இருந்து
காத்தால் போதும்...!.
வாழதானே நினைத்தேன்
சீரழித்து விட்டாயே..
உன் கண்களுக்கு சக
உயிராய் படவில்லையோ..
வெறும் சதையாய் மட்டுமே
காட்சி ஆனேனோ..
பாதிக்கப்பட்டவளாய் நான்கு
நாட்கள் அலசப்படுவேனே..
பின்னாளில் எவருக்கும்
மதிப்பில்லாத உயிராவேனே..
சிலதுளிகளில் நீ சிதைத்தாய்
சமுதாயம் தினமும்...
எண்ணம் எப்போதும் நிலையில் இருக்க..
பெண்ணுக்கு சொன்ன ஆட்கள்
சற்று ஆண்களுக்கு
உணர்த்திவிட்டு போங்களேன்...
இப்படிக்கு
பாதிக்கப்பட்டவள்
- வைஷ்ணவ தேவி
மேகமே....!
சூரியன் சந்திரன்
வெள்ளி பூக்கள்
நீல வானம்
எல்லாமும் துரத்திவிட்டு
இப்பொழுது ஏன் அழுகிறாய்
என்னவள் போல...