முகம் பார்க்கும் கண்ணாடி
என்ன காட்டும் கண்ணாடி...?
இருக்கும் வண்ணத்தையா..?
மறைக்கும் எண்ணத்தையா..?
என்னைத்தான் நான் பார்க்கிறேன்
என்னுள் இருக்கும் உன்னைத்தான்
அது காட்டிடுது.
கனாவில் உனைக் காண
மறுத்து தான்
கண்ணுறங்க நான்
மறந்தேன்
என்னையே நீ நினைப்பதலோ.....
என் கண்ணாடி முன்னாடி வந்து
என்னடி என்னவளே....! என்று
என் முகத்தில்
உன் முகம் காட்டுகிறாய்.
காதலின் முதல் தூது
உன் முகம் காட்டும்
என் வீட்டுக் கண்ணாடி.

