காதலா ஹார்மோனா

கலைந்த மேகங்களில் எல்லாம்
கலையாமல் உன்னை பார்க்கிறேன்
இதயத்தின் இசையில்
சின்னதாய் மாறுதல்
லப்டப் மறந்து
உன் பெயரானது ஓசை
காரணம்
காதலா? ஹார்மோனா?
சின்னப் போட்டி நடக்கிறது
என்னில்...
பரிசளிப்பில்
காதலுக்கு
முதல் பரிசும்
ஹார்மோனுக்கு
ஆறுதல் பரிசும்
அள்ளிக் கொடுத்து
அடக்கமாய் சிரிக்கிறேன்
எனக்குள்...!

எழுதியவர் : ஏஞ்சல் (11-Mar-16, 11:27 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
பார்வை : 85

மேலே