ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை
நாலரை ஆண்டுகளாய்
ஏழரை காட்டிய கடிகாரம்
ஆடத் துவங்குவதும்
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே...
கோமா நிலைக்கு சென்ற சொல்
உயிர் பிழைத்து கொள்(ல்)வதும்
என்றோ தொலைந்து போன
முகங்கள் எல்லாம்
தேடிவந்து நடித்து தொலைவதும்
ஆடல் பாடல் மட்டுமே காட்டிவிட்டு
"இவர் நல்லவரா கெட்டவரா?"
விவாதிக்கும் தொ(ல்)லைகாட்சி நிகழ்சிகளும்
எனக்கென யாரும் இல்லையே
கருப்பு பணம் கூட இல்லையே
ஆதங்கத்தை அள்ளிவீசும் புதிய கட்சிகளும்
கானல் நீராய் வாக்குறுதியை
படம்போட்டு காட்டி
பல் இழிக்கும் எதிர்க்கட்சி அணிகளும்
மதுக்கடை மாமூலில்
மஜாவாய் வாழ்ந்து
ஐந்து ஆண்டுகளின் வாக்குறுதியை
கடைசி ஆறு மதத்திலே
முடிப்பதாய் நடித்து
இன்னும் கொஞ்ச காலம் இருந்தால்...
என இழுத்துக்கொண்டு பாவனை புரிவதும்
தமிழ்நாட்டின்
அரிய காட்சிகள்.....
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறையே
அரங்கேறும்.....!
கவனிக்க தவறாதீர்....!!!