உயிர் உறிஞ்சிய உதடு - காதலாரா
உயிர் உறிஞ்சிய உதடு...
~~~~~~~~~~~~~~~~~~
மிதித்து ஓடிய சேற்றில்
பொதிந்துக் கிடக்கும் ...உன்
சைகை சரித்திரத்தை
வைகை நதி வம்பிளுக்க...
கால் தடுக்கி முகம் திருப்பி
கூந்தல் கவிதையைப் பரப்பி
வரப்புகளுக்கு வயது வர
வைத்திய பாதம் வைக்கிறாய்...
வேர் கிழித்த நீர் உதைத்து
மடை அடைக்கும் மார் சரிய
உடை உளறும் நடை நெய்து
விடை எழுதா காதல் படையை
வயல் முழுக்க நடுகிறாய்....
முகர்ந்து தெளித்த
மூன்றாம் மூலிகை துளியில்
நகர்ந்து ஊறும் நாணலாய்
திறந்து வைத்த கதவுகளை
பறந்த தாவணியில் தாழிட்டு
சுவரின் மவுனம் கற்கிறாய்..
எந்த விஷ சொட்டிலும்
சொர்க்கம் உணராது
மரண மாளிகை கட்டிலில்
தர்க்கம் மீறிய ஓவியமாய்
என்னுடலோடு உறங்கும்
உன்னுதட்டின் ஒரு வரி
ஆன்மாவின் அடி மொழி...
- காதலாரா