என் தங்கைகளையே தவறென்பீரோ
அழகிய புலித்தோல் - என்
அகண்ட கண்களைக் கொள்ள
அடித்துக் கொன்று தோலுருவினால்
அது புலியின் தவறு என்பீரோ??
பூக்களின் அழகு கண்களில் மலர - புது
பூச்சி நிறமாக இலைகள் மின்ன
பூசாரி விறகெரிக்க மரத்தை சாய்த்தால்
பூக்களின் குற்றம் என்பீரோ??
நாளெல்லாம் நடுத்தெருவில் வாலாட்டி - பசியில்
நாக்கிழுத்து கிடக்கும் நாய்களை
நாசக்காரன் ஒருவன் கல்லடி அடித்தால்
நாய் செய்த பிழை என்பீரோ??
இல்லையெனில்....
ஆகாயத் தேவதைகளும் மெச்சும் அழகிகளை - குறை
ஆடையினும் கோவிற்தூண் சிலையளவு போகாதவர்களை
ஆணொருவன் ஆசைதீர்க்க மிருக வேட்டையாடுவான்
ஆனாலும் என் தங்கைகளையே தவறென்பீரோ??