அழகின் சிகரம்
பட்டு போன்ற தேகமும்
பால் வடியும் முகமும்
எச்சில் வடியும் இதழும்
எனை இழுத்துப்பிடிக்கிறதே கண்ணா உன்னுடன் ...
எத்துப்பல்லில் சிரிக்கிறாய்
எட்டி எட்டி உதைக்கிறாய்
எனை கண்ட பின்னே மறைகிறாய்
விளையாடி கலைக்கிறேன் கண்ணா உன்னுடன்
குண்டு விழிகளால் எனை கூறு போட்டு கொள்கிறாய்
பட்டு இதழ்களால் எனை முத்தமிட்டே நனைக்கிறாய்
தாவி தாவி அணைக்கிறாய்
தாய்மையை உணர்கிறேன் கண்ணா உன்னாலே
முல்லை பூ சிரிப்பும் முத்து போலே பற்களும்
கல்மனதினிலே காவிரியை ஊறச்செய்திடுமே
பாஷை நூறு பேசிடுவாய் பதில் சொல்லிடத்தான் யாருமில்லை
ஆசை நூறு நான் வைத்தேன் அழகு கண்ணா உன்மேலே

