கவிதை அறுவடை

உன் காதல்
கலப்பையால்
உழுதுவிட்டுப் போன
என் இதய நிலத்தில்
கவிதை விதகைளைத்
தூவி
கண்ணீர் நீர் விட்டு
வைராக்கிய உரமிட்டு
அறுவடைக்கு
காத்திருக்கிறேன்!
உன் அன்பு
முலாம் பூசி
சாமர்த்திய
சாணம் ஏற்றிய
புன்னகை
அரிவாளால்
இரவோடு இரவாக
என் கவிதை
மலர்களை
கொய்துவிட்டுப்
போகாதே!
அவற்றை விற்றேனும்
பிழைத்துக் கொள்கிறேன்......!
...................சஹானா தாஸ்